• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

இலங்கைக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் வருகை

Hanushya P by Hanushya P
2026/07/02
in இலங்கை, கொழும்பு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆறாவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

நேற்று  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விதானாரச்சியுடன், இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் இந்த வரவேற்பு வழங்கப்பட்டது.

6 ஆவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் நாளை (03) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடலின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவும், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சிகள் மற்றும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது அலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

Related

Tags: Islamic RepublicMuhammad Aliofficial visitSecretary of DefenseSecurity Dialogue.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

Next Post

பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

Related Posts

தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

நாவலவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

2026-08-15
சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!
இலங்கை

சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

2026-08-15
தெல்லிப்பழை  துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

2026-08-15
3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!
இலங்கை

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!

2026-08-15
கடலில் சிக்கிய கடற்படை கப்பல்: விமானப்படை ஹெலிகொப்டர்களுடன் அவசர மீட்புப் பணி!
இலங்கை

கடலில் சிக்கிய கடற்படை கப்பல்: விமானப்படை ஹெலிகொப்டர்களுடன் அவசர மீட்புப் பணி!

2026-08-15
எல் நினோ வெப்பத்தால் மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு!
இலங்கை

எல் நினோ வெப்பத்தால் மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு!

2026-08-15
Next Post
பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தியில் இந்தியா–ஜப்பான் புதிய ஒப்பந்தங்கள்! 

‘ஜனநாயகன்’ கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!

'ஜனநாயகன்' கசிவு விவகாரம்: திரைப்படத்தை 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக தகவல்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.