மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முயற்சியை மலேசியா அரசு முன்னெடுத்துள்ளது.
அதன்படி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த கட்டாயமாக வயது சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் 16 வயதிற்குட்பட்டோர் கணக்குத் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் ஆகிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதாவது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்களுக்கு இந்த விதி பொருந்தும்.
விதிகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு ரூ.24 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் கிளாரா கோ கூறுகையிர்ல, ‘இத்தகைய முழுமையான தடை பதின்ம வயதினரை முறைப்படுத்தப்படாத இணையப் பக்கங்களுக்குத் தள்ளிவிடும்,’ என்று எச்சரித்துள்ளார்.















