நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நெடுந்தீவுக்கு இன்று சென்றபோது பாடசாலை நூலகத்தை திறந்து வைத்ததுடன் , நூலகத்திற்குத் தேவையான ஒரு தொகுதி நூல்களும் அவரால் வித்தியாலய அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலை நூலகத்திற்கு தளபாடங்கள் , 100 மாணவர்களுக்கு புத்தகபைகள் , கற்றல் உபகரணங்கள் , இசைக்கருவிகள் என்பனவும் வழங்கிவைத்தனர்.
மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அடங்கிய குழுவினரை , அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , ஆளுநரின் செயலாளர் ,யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் , நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந.பிரபாகரன் என பலரும் உடன் இணைந்திருந்தனர்.













