• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழக மீனவர்கள் கைது

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/08
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று ( 7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினரிடையே அச்சமும், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.

இத்தேடுதல் முயற்சிக்கு கடற்படையினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

பல மணித்தியாலங்கள் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலின் பயனாக, கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டார்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குக் பின்னால் உள்ள அவல நிலை குறித்தும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அன்றாட வாழ்க்கையை நகர்த்தவும், குடும்பப் பொருளாதாரத்தைக் கொண்டு செலுத்தவும் வேறு வழியின்றி, ஆபத்தான சூழலிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் விபத்துக்கள்: இத்தகைய பொருளாதாரக் காரணங்களால், அண்மைக்காலமாக மீனவர்கள் கடலில் காணாமல் போகும் மற்றும் விபத்துக்களுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.

மீனவர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாகத் தீர்வு காணவும், அவர்களின் உயிர்களையும் வாழ்வாதார உபகரணங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காலங்களில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர விழிப்புணர்வு திட்டங்களை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

காலநிலை மோசமாக இருக்கும் காலங்களில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான குறுகிய கால நிவாரண நிதியுதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.

இத்தகைய காத்திரமான நடவடிக்கைகள் மூலமே எதிர்காலத்தில் மீனவர்களின் உயிர் இழப்புக்களையும், வாழ்வாதாரப் பாதிப்புக்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரம்: ஒரு வாரம் தாக்குதல் தொடரும்

Next Post

மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

Related Posts

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு!
ஆசிரியர் தெரிவு

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் மீட்பு!

2026-06-08
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

2026-06-08
உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!
இலங்கை

உக்ரேன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு!

2026-06-08
2024 பெப்ரவரிக்கு பின்னர் 310 ரூபாவை விஞ்சிய டொலரின் பெறுமதி!
இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் 3.9 பில்லியன் டொலரை விஞ்சியது!

2026-06-08
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!
அம்பாறை

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

2026-06-08
வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!
உலகம்

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

2026-06-08
Next Post
மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

0
தமிழக மீனவர்கள் கைது

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

0
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரம்: ஒரு வாரம் தாக்குதல் தொடரும்

ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரம்: ஒரு வாரம் தாக்குதல் தொடரும்

0
போர்முனை எல்லைகளை தற்காலிகமாக உறையவைக்கத் தயார் – செலன்ஸ்கி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.