• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

Hanushya P by Hanushya P
2026/06/12
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை’ முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீர்மானித்திருக்கின்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 12 ஆம் திகதி கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

blank

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அறிக்கைகளின்படி தற்போது நாடு முழுவதும் பதிவாகியுள்ள சுமார் 39100 டெங்கு நோயாளர்களில் 25.8% விகிதத்தினர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு கொழும்பு மாவட்டம் ‘அதி-அபாய’ மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வைரஸின் தன்மை மற்றும் அதற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் போதிய அவகாசம் பெறாமை என்பன இந்நோய் பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாகஇ அண்மையில் நிலவிய கடும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இம்முறை டெங்கு பரவல்இ வீடுகளை விட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களிலேயே அதிகமாகக் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் நுளம்புகள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

blank

அதன்படி, ஜூன் 15 முதல் 21 வாரத்தில் அரச தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள் மற்றும் வீடுகளைச் சூழவுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கான சிரமதானங்களை ஏற்பாடு செய்தல். பிரதேச செயலகங்கள் ஊடாக அதி-அபாய வலயத்திலுள்ள வீடுகளைப் பரிசோதனை செய்தல் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் பதாதைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் ஊடகங்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் 10 ஆம் தரத்திற்குக் கீழ் உள்ள மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றும்இ மாணவர் எவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பாடசாலை அதிகாரிகளிடம் சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மாவட்ட அரசியல் தலைமைத்துவம்இ சர்வமதத் தலைவர்கள் அரச அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றங்கள்,  முப்படையினர் பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: 'Special Dengue Eradication Week'Colombo DistrictDengue Eradication CommitteeHarini Amarasooriya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

Next Post

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

Related Posts

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்
இலங்கை

2026-06-12

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

2026-06-12
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!
இலங்கை

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

2026-06-12
இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பதவி விலகிய ஆயுதப் படைகளின் அமைச்சர் கடும் விசனம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பதவி விலகிய ஆயுதப் படைகளின் அமைச்சர் கடும் விசனம்!

2026-06-12
அருண் ஹேமச்சந்திரா 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் உரை
உலகம்

அருண் ஹேமச்சந்திரா 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் உரை

2026-06-12
Next Post
செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

0
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

0
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

0
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

0
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

0
செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

2026-06-12
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

2026-06-12
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

2026-06-12
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை!

2026-06-12

Recent News

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

2026-06-12
கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

2026-06-12
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு

2026-06-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.