ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிரான போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உணவு பொருட்களை அரசு தடுத்து நிறுத்தி உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டம் நடக்கிறது.
19வது நாளாக, இன்றும் போராட்டம் தொடர்ந்தது.
போராட்டத்தை ஜே.ஏ.ஏ.சி., எனப்படும், ஜாயின்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி முன்னின்று நடத்துகிறது.
இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என, பாக்., அரசு அறிவித்துள்ளது. மேலும், ராணுவத்தினர் மூலம் போராட்டக்காரர்களை ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட, 30க்கும் மேற்பட்டோரை பாக்., அரசு இன்று கைது செய்தது. இதுவரை, 1,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு பொருட்களை பாக்., அரசு தடுத்து நிறுத்தி உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.













