கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று (24) இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
இதன்படி, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படும்.
அதேவேளையில் மகரகம பகுதிக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்று NWSDB தெரிவித்துள்ளது.
கலதுவாவிலிருந்து பொரலஸ்கமுவாவிற்கு நீர் விநியோகம் செய்யும் பிரதான நீர் குழாயில் அவசியமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுவதாகவும் NWSDB குறிப்பிட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் இந்தக் காலப் பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.











