அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கோனி தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (04) உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 10:30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6, 7, 12 மற்றும் 14 வயதுடைய நான்கு குழந்தைகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக நியூயார்க் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.















