அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மாநாடு இன்று மட்டக்களப்பு YMCA விடுதியில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு அமைப்பின் தேசிய அமைப்பாளர் N. V. சுப்பிரமணியம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் ஆகியோர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த மாநாட்டில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தலைமைத்துவப் பெண்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும்,
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய மாகாணப் பொறுப்பாளர் அழகர் செல்வராஜ் அவர்களும், வட மாகாண பிரதிநிதிகளும் பங்கேற்று தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதன் போது சிறுபாண்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நலிவுற்ற சமூக அமைப்பின் இயக்குநர் கணேக்ஷ் சிறப்பாக ஒருங்கிணைத்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.












