மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதை தொடர்ந்து 140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை “மறு அறிவித்தல் வரை” மூடுவதாக தெஹ்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் அமெரிக்கா ஈரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது
இதனையடுத்து மத்திய கிழக்கு மீண்டும் பதற்றம் தீவிரமடைந்துள்ளதுடன்இதற்குப் பதிலடியாக, ஈரான் பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று வர்த்தக எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர் தாக்குதல்கள் தீவிரமடைந்தன.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணித்த கப்பலை ஈரானியப் படைகள் தாக்கியதற்குப் பதிலடியாக, அமெரிக்கா புதிய தொடர் தாக்குதல்களைத் முன்னெடுத்தது
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை மறு அறிவித்தல் வரை அந்த நீர்வழிப்பாதை மூடப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது
அந்த பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல்களையும் முன்னெடுத்திருந்தது
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஈரானில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியிருந்தன.
அத்துடன் ஹோர்மூஸ் மீண்டும் மூடப்பட்டுள்ளமையினால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு “ஆக்கிரமிப்புக்கும்” “கடுமையாக” பதிலடி கொடுக்கப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள புதிய தளங்கள் குறிவைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது
இதனிடையே அமெரிக்காவுடனான “ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்களின் சகாப்தம் முடிந்துவிட்டதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தளங்கள், தகவல் தொடர்பு வலையமைப்புகள் மற்றும் கடலோர கண்காணிப்பு இடங்கள் உட்பட 140 ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கத் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் இனை மேற்கோள்காடடி இந்த தகவல் வெளியாகியுள்ளது
.













