இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் பணிகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.
நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று அனர்த்தத்திற்குள்ளானது.
அனர்தத்திற்குள்ளான இந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில் அவர்களும் அனர்த்தத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.













