தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக, 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும் எடுத்துள்ளனர்.








