கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவர், கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 12 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 மாடிகளைக் கொண்ட குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் சுற்றுப்புறத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த மாடியில் திறந்த நிலையில் காணப்பட்ட பகுதியொன்றின் ஊடாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















