ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்தத் தாக்குதலில் 822 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் 600 விமானங்கள் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், ரஷ்யா ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் விநியோக வழிகள் உட்பட, இராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















