• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

Rahul by Rahul
2026/10/06
in பல்சுவை
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

30 வயதை கடந்தவர்கள் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதை, ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால், அவர்களால் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால், தினமும் நடப்பது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துமா? உண்மை என்ன? இங்கே தெரிந்துகொள்வோம்.

இப்போதெல்லாம் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உடல் உழைப்பின்மையே. அதிலும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உணவுப் பழக்க மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதனாலேயே தினமும் 30 நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் உடல்நலம் மேம்படும் என தொடர்ந்து வைத்தியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், தினமும் நடப்பது எந்தெந்த வகையில் பலனளிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக நீரிழிவு அபாயத்தை இது எந்தளவு தடுக்கும் என தெரிவதில்லை.

இதுகுறித்து பேட்டியளித்த நாளமில்லாச் சுரப்பியியல் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் பிரணவ் கோடே,

“வழக்கமான நடைப்பயிற்சி என்பது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். காரணம் நமது உடல் நீண்ட நேரம் செயலற்று இருந்தால், குளுக்கோஸ் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் இன்சுலின் எதிர்ப்பு அதிகரித்து, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. அதுவே, வழக்கமாக நடப்பது என்பது தசைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்துகிறது. இது இயற்கையாகவே சர்க்கரை அளவைக் குறைக்கிறது” என்கிறார்.

நடைப்பயிற்சியிலேயே வேகமாக நடப்பது அதிக நன்மை பயக்கும். ஏனெனில் இவ்வாறு நடப்பது, உடல் குளுக்கோஸை வேகமாக உறிஞ்சிக்கொள்ள உதவுவதோடு, இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகிறது. இதன் பொருள், உடலால் குறைந்த இன்சுலினைக் கொண்டே சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதாகும். இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது.

பிற நேரங்களை காட்டிலும் சாப்பிட்ட பிறகு நடப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் சாப்பிட்ட பிறகு ரத்தச் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது. ஒருநாளில் வெறும் 10-15 நிமிடங்கள் வேகமாக செய்யும் நடைப்பயிற்சி கூட நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் அல்லது அந்நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கம் இன்னும் முக்கியமானது.

வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் நடப்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்நாட்களில் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதுகூட கட்டாயமில்லை. நடைப்பயிற்சியுடன், சமச்சீரான உணவை உண்பதும் அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், அதிக சர்க்கரை உள்ள உணவுகளையும் குறைப்பது நல்லது. மேலும், ஆரோக்கியத்திற்குப் போதுமான தூக்கம் பெறுவதும் இன்றியமையாதது.

ஆகவே, தினமும் நடக்கும் ஒரு சிறிய பழக்கம்கூட நாம் நினைத்திடாத பல நன்மைகளைத் தரும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, நீரிழிவு அபாயத்தையும் குறைக்கும். மேலும் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் உதவும். எனவே, இன்றிலிருந்தே நடைப்பயிற்சியை ஒரு பழக்கமாக மாற்றி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

Related

Tags: Does walking help control blood sugar?
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

Next Post

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

Related Posts

உலகின் விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியாவின் மூங்கில் உப்பு
பல்சுவை

உலகின் விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியாவின் மூங்கில் உப்பு

2026-11-21
22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!
பல்சுவை

22 ஆண்டுகளாகப் பணியாற்றும் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் விஜய்!

2026-11-18
இந்தியக் காதலரைத் திருமணம் செய்ய வந்த 61 வயது கனடா பெண்ணுக்கு ஏமாற்றம்
பல்சுவை

இந்தியக் காதலரைத் திருமணம் செய்ய வந்த 61 வயது கனடா பெண்ணுக்கு ஏமாற்றம்

2026-11-17
மும்பையில் சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் தம்பதியினர்!
இந்தியா

மும்பையில் சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் தம்பதியினர்!

2026-11-16
இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?
பல்சுவை

இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

2026-11-16
கிழக்கு இமயமலையில் சிறிய கொம்புகளைக் கொண்ட ஐந்து புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு
பல்சுவை

கிழக்கு இமயமலையில் சிறிய கொம்புகளைக் கொண்ட ஐந்து புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

2026-11-14
Next Post
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி இலங்கை – உலக வங்கி புதிய அறிக்கை!

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

சாதனைகளுடன் பதவி விலகினார் ஹர்மன்ப்ரீத் கவுர்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
பன்னிபிட்டிய பழைய இரும்பு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து – பொருட்களுக்குச் சேதம்

பன்னிபிட்டிய பழைய இரும்பு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து – பொருட்களுக்குச் சேதம்

0
Nvidia நிறுவனத்தின் கணக்கியல் முறைமை தொடர்பில் SEC விசாரணை – பங்கு விலையிலும் சரிவு

Nvidia நிறுவனத்தின் கணக்கியல் முறைமை தொடர்பில் SEC விசாரணை – பங்கு விலையிலும் சரிவு

0
கட்டாரில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று இலங்கை – ஹொங்கொங் மோதல்

கட்டாரில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று இலங்கை – ஹொங்கொங் மோதல்

0
உலகின் விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியாவின் மூங்கில் உப்பு

உலகின் விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியாவின் மூங்கில் உப்பு

0
தாய்லாந்து பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: