வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் மூளையில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் காலணிகளையும் பெண்களுக்கான ஆடைகளையும் பார்வையிடுவது போன்ற புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டது.
இந்தப் புகைப்படங்கள் திங்கள்கிழமை (19) வடகொரிய அரசு ஊடகங்களால் வெளியிடப்பட்டன.
அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதன் மூலம், அவர் இறந்துவிட்டதாகப் பரவிய வதந்திகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த புகைப்படங்களில், ஆடை மற்றும் காலணி கண்காட்சி ஒன்றில் கிம் கலந்துகொண்டிருப்பதையும், அங்குள்ள சிறுவர்களுக்கான காலணிகளைப் பார்வையிடுவதையும், பெண்களுக்கான மேலங்கிகளை (coats) ஆய்வு செய்வதையும் காண முடிகிறது.
அந்நாட்டின் கொரிய மத்திய செய்தி முகமை (KCNA), கிம் திங்கள்கிழமை அன்று இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட துல்லியமான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒரு புகைப்படத்தில், ஒரு பெண் வைத்திருக்கும் இளஞ்சிவப்பு நிற காலணியை கிம் ஆய்வு செய்வது தெரிகிறது.
மற்றொரு புகைப்படத்தில், அவர் கால்களை அகட்டி நின்றுகொண்டு, ஒரு அதிகாரியிடம் பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.















