மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில், ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளம் வயது வீராங்கனை என்ற புதிய சாதனையை கர்நாடகாவைச் சேர்ந்த 15 வயது சகலதுறை ஆட்டக்காரரான உமா காஷ்வி படைத்துள்ளார்.
இவரை அடிப்படை விலையான இந்திய ரூபாய்.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு 16 வயதில் ஒப்பந்தமான தியா யாதவின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
அத்துடன், இவர் பிசிசிஐ மகளிர் 15 வயதுக்குட்பட்டோர் ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் உள்பட 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















