லாகூரில் தற்சமயம் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
லாகூரில் அமைந்துள்ள கடாபி மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியானது இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் பந்துப் பரிமாற்றங்களுக்குள் வெகு நேரம் தாக்குப் பிடிக்காமல் 25.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபடியாக பாபர் அசாம் 29 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்சான் மதுஷங்க 8.3 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அவர் தவிர அஷித பெர்னாண்டோ மூன்று விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்க மற்றும் துனித் வெல்லாகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி 111 ஓட்டங்களை நோக்கி சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாடவுள்ளது.














