• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கனடா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சீன வாகன உற்பத்தியாளர்களை நாட வேண்டிய நிலை ஏற்படலாம் – மார்க் கார்னி

கனடா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சீன வாகன உற்பத்தியாளர்களை நாட வேண்டிய நிலை ஏற்படலாம் – மார்க் கார்னி

If Canada-US trade negotiations fail, it may become necessary to turn to Chinese vehicle manufacturers – Mark Carney

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/16
in உலகம், கனடா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகன உற்பத்தித் துறையைப் பாதுகாக்கும் வகையில் வெற்றியளிக்காவிட்டால், கனடா சீன வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என கனேடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஐரோப்பா, சீனா அல்லது ஜப்பானைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளர்களுடன் மாற்று வாய்ப்புகள் குறித்து கனடா ஆராயலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை இந்த வாரம் சீனாவின் ஷென்சென் நகரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், கம்போடியாவில் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். குறித்த சந்திப்பில் சீனாவின் வாகன உற்பத்தித் துறை தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் சிறந்த வாகனத் தொழிலாளர்கள் உள்ளதாகவும், வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த சந்தையில் அவர்களுக்குப் பூரண வேலைவாய்ப்புகளை வழங்குவதே தமது நோக்கம் எனவும் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகளால் வட அமெரிக்க வாகன உற்பத்திச் சந்தையின் ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக உடன்படிக்கை, கனடாவின் வாகன உற்பத்தித் துறை தொடர்ந்து செயற்படக்கூடிய வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீன முதலீடுகள் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் அழுத்தம் கொடுப்பதற்கான உத்தியாகப் பயன்படுத்தப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, அது அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை அல்ல, மாறாக ஒரு நடவடிக்கைக்கான எதிர்வினை என மார்க் கார்னி பதிலளித்துள்ளார்.

மேலும், சீன முதலீடுகள் கனடாவில் வெறுமனே இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களைப் பொருத்தும் நடவடிக்கையாக மட்டும் அமையக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலாக, கனடாவில் முறையான உற்பத்தி நிலையங்கள், தொழிலாளர் நலத் தரநிலைகள் மற்றும் உள்நாட்டு விநியோகக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் மின்சார வாகன உற்பத்திக்குத் தேவையான கனடாவின் முக்கிய கனிம வளங்களையும் பயன்படுத்தும் வகையில் உற்பத்தித் துறை விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட உடன்படிக்கையின் கீழ், சீன மின்சார வாகனங்கள் மீதான கனடாவின் 100 சதவீத இறக்குமதி வரி 6.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதன்படி, ஆரம்பகட்டமாக ஆண்டுதோறும் 49,000 சீன மின்சார வாகனங்களை கனடாவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, கனடாவின் கனோலா உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த உடன்படிக்கைக்கு கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சீன மின்சார வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது கனேடியர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதிப்பதுடன், அமெரிக்கச் சந்தைக்கான அணுகலையும் ஆபத்துக்குள்ளாக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இறக்குமதி வரி நடவடிக்கைகளால் கனடாவின் வாகன உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் கொம்பஸ் வாகன உற்பத்தியை ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நகரிலிருந்து அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்துக்கு மாற்றிய ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் கனடா அண்மையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும் சில முரண்பாடுகள் தொடர்வதாகவும் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Related

Tags: If Canada-US trade negotiations failit may become necessary to turn to Chinese vehicle manufacturers – Mark Carney
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் புதிய திட்டம்!

Next Post

இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

Related Posts

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்
ஆசிரியர் தெரிவு

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்

2026-11-16
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் புதிய திட்டம்!
ஆசியா

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் புதிய திட்டம்!

2026-11-16
தாய்லாந்தில் பயங்கர தீ விபத்து; 11 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!
உலகம்

தாய்லாந்தில் பயங்கர தீ விபத்து; 11 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்!

2026-11-16
அமெரிக்காவில் மூன்றாவது நாளாக நீடிக்கும் விமானப் போக்குவரத்து பாதிப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் மூன்றாவது நாளாக நீடிக்கும் விமானப் போக்குவரத்து பாதிப்பு!

2026-11-16
விமானப் போக்குவரத்துக் கோளாறு: அமெரிக்காவில் தொடரும் நெருக்கடி!
அமொிக்கா

விமானப் போக்குவரத்துக் கோளாறு: அமெரிக்காவில் தொடரும் நெருக்கடி!

2026-11-15
சீனாவில் மூன்று வல்லரசுத் தலைவர்கள் சந்திப்பு?
ஆசிரியர் தெரிவு

சீனாவில் மூன்று வல்லரசுத் தலைவர்கள் சந்திப்பு?

2026-11-15
Next Post
இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

0
உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்

0
கனடா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சீன வாகன உற்பத்தியாளர்களை நாட வேண்டிய நிலை ஏற்படலாம் – மார்க் கார்னி

கனடா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சீன வாகன உற்பத்தியாளர்களை நாட வேண்டிய நிலை ஏற்படலாம் – மார்க் கார்னி

0
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் புதிய திட்டம்!

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் புதிய திட்டம்!

0
பிரேக் இன்றி நீண்ட தூரம் பயணித்த ரயில்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: