நாட்டில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பலத்த மழையுடனான வானிலையால் 20 மாவட்டங்களில் 26,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.