நியூசிலாந்தில் கடந்த மாதத்திற்கு பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்லாந்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்கும் மகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளதுடன் இந்த தொற்று ஏதேனும் தொற்று வகைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பயணி தனிமைப்படுத்தலை விட்டு வெளியேறிய பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக, குடும்பத்தில் உள்ள சிறுமியின் உயர்நிலைப் பாடசாலை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும் என்றும் அங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொற்று எதுவும் பதிவாகாத நாடாக நியூசிலாந்து இருந்ததுடன், எதிர்வரும் பெப்ரவரி 20 முதல் 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியி போடவும் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.