அஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் சென் ஷி-சுங் தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராசெனெகாவின் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் தடுப்பூசிகள் இம்மாதத் தொடக்கத்தில் தாய்வானுக்குக் கிடைத்திருந்தன.
இந்நிலையில், முதல் தடுப்பூசித் திட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இதனை்ப பெறுவதற்கு சுமார் 60 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் கணக்கிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டதால் மொத்த வழக்குகளை ஆயிரத்துக்கீழ் வைத்திருக்க தாய்வானால் முடிந்துள்ளது.
இதன்படி, தாய்வானில் இதுவரை 998 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பத்துப் பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் 24 பேர் மட்டுமே வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும், கடந்த டிசம்பர் முதல், அஸ்ட்ராசெனெகாவிடமிருந்து 10 மில்லியன் உட்பட கிட்டத்தட்ட 20 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வாங்குவதற்கு தாய்வான் ஒப்பந்தம் செய்துள்ளது.