உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 12கோடியே 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 27இலட்சத்துக்கு 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக, பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.