அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்கொட் மோரிசன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பதிலாக உட்துறை அமைச்சர் பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார்.
அவுஸ்ரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.