இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இடம்பெற்ற நில அதிர்வில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தீவின் தெற்குக் கடற்கரையில் 6.0 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இது கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தின் சம்பர்புகுங் நகரிலிருந்து தெற்கே 45 கிலோமீற்றர் தூரத்தில் 82 கிலோமீற்றல் ஆழத்தில் மையம்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நில அதிர்வில், ஏழு பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தேசிய பேரிடர் தணிப்பு முகாமையின் செய்தித் தொடர்பாளர் ராதித்யா ஜாதி கூறியுள்ளார்.
இதேவேளை, கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் சுனாமியை ஏற்படுத்தும் ஆற்றல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.