அமெரிக்காவின் சிகாகோவில் பொலிஸாரால் 13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்படும் காணொளி காட்சி, இரண்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 29ஆம் திகதி 13 வயதான ஆடம் டோலிடோவை மார்பில் ஒரு முறை சுடுவதற்கு முன்பு பொலிஸார் ‘டிராப் இட்’ என்று கூச்சலிடுவதை பாடிகேம் காணொளி காட்டுகிறது.
டோலிடோ ஆயுதம் வைத்திருந்ததாகவும், 21 வயதான ரூபன் ரோமன் ஜூனியருடன் தப்பி ஓடியதாகவும் சிகாகோ பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, சிறுவன் ஆயுதம் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொலிஸாரின் காணொளி, அவர் விழுந்த இடத்திற்கு அருகில் ஒரு கைத்துப்பாக்கியைக் காட்டுகிறது.
ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியின் விசாரணையின் முடிவுக், நகரம் காத்திருக்கும் நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு மேலும், வன்முறை எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது.