சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப் பாடசாலை வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
ஆலயத்தின் செயலாளர் தே.அமுதராஜ் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பாடசாலைக் கட்டடத்தை திறந்துவைத்தார்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான், திவாகரக் குருக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்
இந்த அறநெறிப் பாடசாலையானது, ஆதிவிநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவரது ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.