பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் உள்ள சொகுசு விடுதியில், தலிபன்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், அவர் அதிஷ்டவசமாக தாக்குதல் நடந்த நேரத்தில், சீனாவின் தூதர் நோங் ராங் ஒரு விழாவில் இருந்தர் எனவும், அப்போது அவர் சொகுசு விடுதியில் இல்லை எனவும் பாகிஸ்தானின் உட்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்ததாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததோடு 11பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்த பிறகு, இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அக்காணொளியில் தி செரீனா சொகுசு விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் தீ பற்றி எரிவது தெரிகிறது.
பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தானுக்கு விடுதலை கோரும் தீவிரவாதிகள் அப்பகுதியில் வரும் சீன கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பதே இந்த தாக்குதலுக்கு மூலக்காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.