தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முடிவை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
நீண்ட வார இறுதியில் கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், பாடசாலைகளை மூடுவது குறித்து இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை என்றும் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.