கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் மொத்தமாக மூன்று இலட்சத்து 733பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 53ஆவது நாடாக விளங்கும் கஸகஸ்தானில் இதுவரை மூவாயிரத்து 512பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 894பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 39ஆயிரத்து 943பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 221பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக இரண்டு இலட்சத்து 57ஆயிரத்து 278பேர் பூரண குணமடைந்துள்ளனர்.