ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 70ஆயிரத்து 70பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஈரானில், இதுவரை மொத்தமாக 24இலட்சத்து 17ஆயிரத்து 230பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 21ஆயிரத்து 26பேர் பாதிக்கப்பட்டதோடு 496பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 54ஆயிரத்து 931பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 18இலட்சத்து 92ஆயிரத்து 229பேர் பூரண குணமடைந்துள்ளனர்.