இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று போலந்தின் இகா ஸ்வியடெக் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியடெக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.
இப்போட்டியில் இரு வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இதில் இகா ஸ்வியடெக்கின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது.
இதில் ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடிய இகா ஸ்வியடெக், 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று இகா ஸ்வியடெக் சம்பியன் பட்டத்தை வென்றார்.
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியடெக் பெறும் முதல் சம்பியன் பட்டம் இதுவாகும்.