இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது ஜோ ரூட் 42 ஓட்டங்களுடனும் றொரி பர்ன்ஸ் 59 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
லோட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது நியூஸிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவோன் கோன்வே 200 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஒல்லி ரொபின்சன் 4 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது டோமினிக் சிப்ளி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஸெக் கிரெவ்லி 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ மற்றும் கெய்ல் ஜேமீசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை இங்கிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.