இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்திருந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 138 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 59 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 93 ஆயிரத்து 896 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 இலட்சத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 76 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 11 இலட்சத்து 77 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.