ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது, அல்லது தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை செய்யவுள்ளதுடன், அவர்களின் அறிவுறைக்கு அமைய ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் வழங்கப்படுமான என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.