போர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் மொத்தமாக ஒன்பது இலட்சத்து இரண்டாயிரத்து 489பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 31ஆவது நாடாக விளங்கும் போர்த்துகலில் 17ஆயிரத்து 142பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 194பேர் பாதிக்கப்பட்டதோடு ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 43ஆயிரத்து 323பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 141பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு இலட்சத்து 42ஆயிரத்து 24பேர் பூரண குணமடைந்துள்ளனர்.