பங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் மொத்தமாக பத்து இலட்சத்து 543பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 29ஆவது நாடாக விளங்கும் பங்களாதேஷில் இதுவரை மொத்தமாக 16ஆயிரத்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 11ஆயிரத்து 324பேர் பாதிக்கப்பட்டதோடு 212பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 155பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 182பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு இலட்சத்து 62ஆயிரத்து 384பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.