பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் மொத்தமாக பத்து இலட்சத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் பாகிஸ்தானில் இதுவரை 22ஆயிரத்து 939பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 425பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 53ஆயிரத்து 623பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 525பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஒன்பது இலட்சத்து 23ஆயிரத்து 472பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.