2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது.
இதன்படி 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 71 பதக்கங்களை சீனா வென்று முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்கா, 27 தங்கம், 33 வெள்ளி 24 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 84 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 40 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
17 தங்கம், 4 வெள்ளி, 17 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 38 பதக்கங்களுடன் அவுஸ்ரேலியா நான்காவது இடத்தில் உள்ளது.
15 தங்கம், 18 வெள்ளி, 16 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 49 பதக்கங்களுடன் பிரித்தானியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ரஷ்யா, ஜேர்மனி, நியூஸிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது.