மொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொரோக்கோவில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 325பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 41ஆவது நாடாக விளங்கும் மொரோக்கோவில் இதுவரை பத்தாயிரத்து 404பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 43பேர் பாதிக்கப்பட்டதோடு 69பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 73ஆயிரத்து 510பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 41பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்து 17ஆயிரத்து 411பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.