மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 30இலட்சத்து 20ஆயிரத்து 596பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை இரண்டு இலட்சத்து 46ஆயிரத்து 203பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 711பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 727பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 99ஆயிரத்து 182பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிக்சிசை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 798பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 23இலட்சத்து 75ஆயிரத்து 211பேர் பூரண குணமடைந்துள்ளனர்.