ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200யைக் கடந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இதுவரை 5,700பேர் காயமடைந்துள்ளனர்.
மொத்த 1,297 இறப்புகளில், 1,054 தென் நிர்வாகப் பிராந்தியத்திலும், 119 கிராண்ட் ஆன்ஸிலும், 122 நிப்பேஸிலும், இரண்டு வடமேற்கு பிராந்தியத்திலும் உள்ளன என்று சிவில் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 13,694 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மேலும் 13,785 பேர் சேதமடைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவை மட்டுமின்றி, அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள கிரேஸ் புயல் ஹெய்டியை திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளது மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெய்டியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், இந்த ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டில் 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 220,000 முதல் 300,000பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.