ஜோர்ஜியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்ஜியாவில் ஐந்து இலட்சத்து ஆயிரத்து 297பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 50ஆவது ஜோர்ஜியாவில் இதுவரை ஆறாயிரத்து 590பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 921பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 57ஆயிரத்து 730பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 471பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து நான்கு இலட்சத்து 36ஆயிரத்து 977பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.