ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஒரு இலட்சத்து 255பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஈரானில், இதுவரை 45இலட்சத்து 87ஆயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 31ஆயிரத்து 266பேர் பாதிக்கப்பட்டதோடு 564பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 46ஆயிரத்து 860பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏழாயிரத்து 538பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 38இலட்சத்து 40ஆயிரத்து 568பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.