பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 36ஆயிரத்து 572பேர் பாதிக்கப்பட்டதோடு 113பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 63இலட்சத்து 92ஆயிரத்து 160பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 373பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து ஐந்தாயிரத்து 098பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 909பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 49இலட்சத்து 55ஆயிரத்து 689பேர் பூரண குணமடைந்துள்ளனர்.