பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 48பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 67இலட்சத்து 57ஆயிரத்து 650பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 485பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 98ஆயிரத்து 103பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 982பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 54இலட்சத்து 27ஆயிரத்து 062பேர் பூரண குணமடைந்துள்ளனர்.