இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இஸ்ரேலில் மொத்தமாக பத்து இலட்சத்து ஒன்பதாயிரத்து ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் இஸ்ரேலில், இதுவரை 11இலட்சத்து நான்காயிரத்து 971பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏழாயித்து 129பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 244பேர் பாதிக்கப்பட்டதோடு ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 88ஆயிரத்து 833பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 654பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.