உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 20கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் 20கோடியே ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 22கோடியே 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றினால் மொத்தமாக 46இலட்சத்து 21ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.