கொரோனாவுக்கு எதிரான மேலம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக வழங்கப்படவுள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்குவதற்கு இது போதுமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.