பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 417பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 76இலட்சத்து 64ஆயிரத்து 230பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 168பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 42ஆயிரத்து 492பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 916பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 61இலட்சத்து 85ஆயிரத்து 570பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.